CMPMK
புதிய வளர்ச்சியின் தொடக்கம் !!!

சிறிய மாற்றம் பெரிய முன்னேற்றக் கழகம்

தமிழகத்தின் மக்களுக்காக — ஒரு புதிய அரசியல் பயணம்

CMPMK Logo
சிறிய மாற்றம்
பெரிய முன்னேற்றக் கழகம்
நெ.111, செந்தில் நகர், சென்னை – 603 210
மக்களிடையே அரசியல் அறியாமையை ஒழிப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்பாடு தனியார் கல்வி மற்றும் மருத்துவமனைகளை ஒழிப்பது தமிழ்ப் பலாசாரம் சீரழிவைத் தடுப்பது அனைத்துச் சாதியினருக்கும் சமான இட ஒதுக்கீடு மக்களிடையே அரசியல் அறியாமையை ஒழிப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்பாடு தனியார் கல்வி மற்றும் மருத்துவமனைகளை ஒழிப்பது தமிழ்ப் பலாசாரம் சீரழிவைத் தடுப்பது அனைத்துச் சாதியினருக்கும் சமான இட ஒதுக்கீடு
0
நிறுவப்பட்ட ஆண்டு
0
மாவட்டங்கள்
0
சட்டமன்றத் தொகுதிகள்
0
முக்கிய கொள்கைகள்
எங்களைப் பற்றி

தமிழகத்தை
மாற்றுவோம்

சிறிய மாற்றம் பெரிய முன்னேற்றக் கழகம் (CMPMK) என்பது தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்களுக்காக உழைக்கும் ஒரு மக்கள் இயக்கம். நீதி, சமத்துவம், வளர்ச்சி என்ற முத்தூண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறோம்.

மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே நமது முதன்மை நோக்கம்.

தமிழின மக்களுக்கு கட்சி சார்பற்ற நலன்களை வழங்குவதில் CMPMK உறுதியாக இயங்குகிறது.

நமது நம்பிக்கைகள்

கழகத்தின் கொள்கைகள்

i
மக்களிடையே அரசியல் அறியாமையை ஒழிப்பது.
ii
மறைந்த முன்னாள் அரசியல் தலைவர்களை ஒருபோதும் கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள்.
iii
பிற கட்சியில் முக்கிய பொறுப்புகளில் வசித்து அக்கட்சிக்கு துரோகம் இழைத்து கட்சி தாவல் செய்து வருவோரை கழகம் ஒருபோதும் இணைத்துக் கொள்ளாது.
iv
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது.
v
கழக மொழிக் கொள்கை என்னவென்றால், தாய்மொழி, தேசிய மொழி மற்றும் வெளிநாட்டு மொழிகள் அனைத்தும் அவசியமானவை என்பதாகும்.
vi
அனைத்துத் துறைகளிலும் அனைத்துச் சாதியினருக்கும் சமான இட ஒதுக்கீடு.
vii
அனைத்து மதங்களும் உயர்வானவையே என்ற புரிதலை ஏற்படுத்துவது.
viii
மதுக்கடைகள் மற்றும் மதுபான உற்பத்தி ஆலைகளை முழுமையாக ஒழிப்பது.
ix
தனியார் கல்வி மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஒழித்து, இரண்டையும் அனைவருக்கும் இலவசமாகவும் உயர்தரமாகவும் வழங்குவதே எங்கள் முக்கியக் கொள்கையாகும்.
x
தமிழ்ப் கலாசாரம் சீரழிவைத் தடுப்பது.
நமது திட்டம்

கழகத்தின் முக்கிய நோக்கம்

i
அனைத்துச் சாதியியல் சங்கங்களையும் ஒன்றிணைத்து, அனைத்துச் சாதியினருக்கும் சமான இடஒதுக்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசாங்கத்தை நிலைநாட்டுவதே இந்தக் கழகத்தின் நோக்காகும்.
ii
தமிழ்நாட்டில் எங்கும் ஒரு மதுக்கடை கூட இயங்காத வகையில் மதுக்கடைகள் மற்றும் மதுபான உற்பத்தி ஆலைகளை முழுமையாக ஒழிப்பதே கட்சியின் முதன்மை நோக்காகும்.
iii
அதிக வட்டி விகிதங்கள், தொடர்ச்சியான வேலையின்மை மற்றும் எல்லாவற்றிற்கும் வட்டி வசூலிக்கப்படும் சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அவல நிலையை முழுமையாகப் போக்குவதே கட்சியின் முக்கிய நோக்காகும்.
நமது உறுதிமொழி

முக்கிய குறிக்கோள்

i
குடும்பங்களால் கைவிடப்பட்டு, ஆதரவற்ற நிலையில் சாலை ஓரங்களில் வாழும் அனைத்தும் மக்களுக்கும் உணவு மற்றும் உறைவிடம் போன்ற வசதிகளை வழங்குவதே முக்கிய குறக்கோளாகும்.
கழகத் தலைமை

நமது தலைவர்

மத்திய செயலாளர் & நிறுவனர்


கழக தலைவர்

"ஒவ்வொரு மக்களின் கண்ணீரும் மாற்றத்தின் விதை. நாம் அந்த விதையை வளர்க்கப் போகிறோம் — CMPMK-வுடன் ஒரு புதிய தமிழகம் கட்டுவோம்."

நம்முடன் இணையுங்கள்

உறுப்பினராக விண்ணப்பிக்க அல்லது தொடர்பு கொள்ள

📞 73057 11377 📞 90802 06891 ✉ cmpmk786@gmail.com
உறுப்பினர் சேர்க்கை படிவம் →